பெரம்பலூர்: தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் அடித்தட்டு மக்களுக்கு மாதம் 5 லிட்டர் மண்எண்ணெய் இலவசமாக வழங்க வேண்டும்'' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசலை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு விலையிலும், பணக்காரர்களுக்கு ஒரு விலையிலும் விற்பனை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு நிலவுவதால் அடித்தட்டு மக்களுக்கு இலவசமாக 5 லிட்டர் மண்எண்ணெய் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
பல ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களாக பணி புரியும் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம், கந்தம்பட்டி திரவுபதியம்மன் கோயிலை திறக்க அரசு உத்தரவிட வேண்டும். தமிழக மீனவர்களை காப்பாற்ற இந்திய அரசு முன்வர வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.