வன்னியர் சங்கத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு இன்று பரோலில் விடுவிக்கப்பட்டார்.
அ.இ.அ.தி.மு.க பிரமுகரை கொலை செய்ய முயன்றதாக காடு வெட்டி குருவை மீன் சுருட்டி காவல்துறையினர் ஜூலை 5ஆம் தேதி கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்ததால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், வன்னியர் வீர வணக்க நாள் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக இன்று ஒருநாள் அவர் பரோலில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 70 நாட்களுக்கு பிறகு, பரோலில் வெளியே வரும் காடுவெட்டி குரு, இன்று மாலை மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்.