சிறிலங்காவுக்கு ஆயுதம் வழங்கும் மத்திய அரசை கண்டித்து 23ல் ரயில் மறியல்: தி.க!
புதன், 17 செப்டம்பர் 2008 (10:22 IST)
சிறிலங்க அரசுக்கு ராணுவ தளவாடங்களை அளிப்பது, சிறிலங்க ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது போன்ற மத்திய அரசின் போக்கை கண்டித்து செப்டம்பர் 23ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
webdunia photo
FILE
சென்னையில் நேற்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அண்ணாவின் நூற்றாண்டு விழாவை அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
சிறிலங்க அரசுக்கு ராணுவ தளவாடங்களை அளிப்பது, சிறிலங்க ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது போன்ற மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்தும், ஒரிசா நிகழ்வை கண்டித்தும் செப்டம்பர் 23ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், சேதுசமுத்திர திட்டம், ஒகேனக்கல் திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் அக்டோபர் 4ஆம் தேதி திருநெல்வேலியில் திராவிடர் கழக மாணவரணி மாநில மாநாட்டினை எழுச்சியுடன் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.