அண்ணா உருவம் பொறித்த நாணய‌ம் வெ‌ளி‌யிட ம‌த்‌திய அரசு முடிவு!

செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (16:53 IST)
முதலமைச்சர் கருணா‌நி‌தி‌யி‌னகோரிக்கையை ஏற்று அ‌றிஞ‌ரஅ‌ண்ணஉருவ‌மபொ‌றி‌த்நாணய‌ங்க‌ளவெ‌‌ளி‌யிட‌ப்படு‌மஎ‌ன்றமத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதகுற‌ி‌த்தத‌மிழஅரசஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், பேரறிஞர் அண்ணா‌வி‌னநூற்றாண்டு ‌விழா 2008 செப்டம்பர் 15 முதல் தொடங்குவதையொட்டி தமி‌மொழி, இலக்கியங்கள் மேம்பாட்டிற்காகவும், தமிழகத்தில் வாழும் ஏழை எளிய நலிந்த பிரிவினரின்
முன்னேற்றத்திற்காகவும் அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டுகளைப் போற்றும் வகையில் ஓராண்டு முழுவதும் விழா கொண்டாடிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மிகச் சிறந்த ஜனநாயகவாதி, அறிஞர், சமூக சீர்திருத்தவாதி, மக்களின் மகத்தான தலைவர், ஏழைகளின் நண்பன் என்று பன்முகப் பெருமைகள் கொண்ட பேரறிஞர் அண்ணா‌வின் பெருமையைப் போற்றும் வகையில் அவரது திருவுருவம் பொறித்த நாணயங்கள் வெளியிட வேண்டுமென மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பர‌த்துக்கு கட‌ந்மாத‌ம் 28ஆ‌மதே‌தி அன்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதியிருந்தா‌ர்.

அது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கட‌ந்த 2ஆ‌மதே‌தி அன்று பதில் எழுதியிருந்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் செ‌ப்ட‌ம்ப‌ர் 14ஆ‌மஅன்று எழுதிய கடிதத்தில் 15.9.2008 அன்று தொடங்கும் பேரறிஞர் அண்ணா‌வின் நூற்றாண்டு நினைவாக மத்திய அரசு அவரது திருவுருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட முடிவு செ‌ய்துள்ளது என்றும், நாணயங்களை வெளியிடுவது தொடர்பாக தமிழக அரசின் ஆலோசனைகளுடன் முடிவு செ‌ய்யப்படும் என்றும் முதலமைச்சர் கருணா‌நி‌தி‌க்கதெரிவித்துள்ளார்.

இந்த விவரம் கிடைத்ததும் முதலமைச்சர் கருணா‌நி‌தி‌, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பர‌த்து‌க்கு நன்றி கூறியுள்ளார் எ‌ன்றதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்