தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து ‌சி‌றில‌ங்க கடற்படையினர் அட்டூழியம்!

செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (13:08 IST)
கச்சத்தீவு அருகே ராமே‌‌ஸ்வரம் மீனவர்களின் படகுகளை உடைத்தும், துப்பாக்கியால் சுட்டு மிரட்டியும் ‌சி‌றில‌ங்கடற்படையினர் அட்டூழியம் செய்தனர்.

ராமே‌ஸ்வரம் துறைமுக கடற்கரைப் பகுதியில் இருந்து 504 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றன. இதில் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ‌‌சி‌றில‌ங்க கடற்படையினர் இரண்டு கப்பல்களில் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென்று வானத்தை நோக்கியும், படகுகளை நோக்கியும் சரமா‌ரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

சிறிது நேரத்தில் 25 படகுகளை ‌சி‌றில‌‌ங்க கடற்படையினர் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து அவர்கள் தங்களது கப்பல்களை கொண்டு மீனவர்களின் படகுகள் மீது மோதினர். இதில் ஒரு படகு இரு துண்டாக உடைந்தது. ‌பி‌ன்ன‌ர் மீனவர்களி‌ன் வலைகளை அறுத்து நாசமாக்கினர்.

''எங்கள் எல்லை பகுதியில் இனிமேல் மீன் பிடிக்கக்கூடாது. மீறினால் உங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று ‌சி‌றில‌ங்க கட‌ற்படை‌யின‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை ‌செ‌ய்தன‌ர். இதனா‌ல் உயிர் தப்பினால் போதும் என்று உடனே கரை திரும்பி ‌வி‌ட்டோ‌ம்'' எ‌ன்று ‌மீனவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

சி‌றில‌ங்க கடற்படையினரின் தாக்குதல் பற்றி மீனவ சங்க நிர்வாகிகள் ம‌ற்று‌ம் ‌மீனவ‌ர்க‌ளிட‌ம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ராமே‌ஸ்வரம் கடற்கரையில் ஏராளமான மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரண்டதால் பதட்டம் நிலவியது.

இதை‌த் தொட‌ர்‌‌ந்து தா‌க்குதலு‌க்கு உ‌ள்ளான ‌மீனவ‌ர்க‌ளிட‌ம் மீன் துறை அதிகாரிகள், கியூ பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக சென்னை மீன் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இ‌ந்த தா‌க்குத‌ல் குற‌ி‌த்து கரை திரும்பிய மீனவர்கள் கூறுகை‌யி‌ல், ‌''சி‌றில‌ங்க கடற்படையினர் ஆத்திரத்தில் எங்கள் மீது சுட்டு இருந்தால் பலர் பலியாகி இருப்போம். கப்பல்களால் எங்கள் படகுகள் மீது பய‌ங்கரமாக மோதியதில் அதிர்ஷ்டவசமாக தான் உயிர் தப்பினோம்'' எ‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்