இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் சிலர், விளக்குகள் அமைப்பதற்காக கட்டப்பட்டிருந்த சாரத்தின் மீது ஏறி நின்றதன் காரணமாக, பாரம் தாங்காமல் சாரம் சரிந்து கீழே விழுந்ததில், கம்பம் ஒன்றியம், அனுமந்தன்பட்டியை சேர்ந்த சலேத் என்பவர் மரண மடைந்துவிட்டார்.
அதே போல், பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வாகனம் மூலம் சென்னை திரும்பிக் கொண்டிருந்த ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த மகா லிங்கம் என்பவர் சென்ற வேன், லாரி மோதி நிகழ்விடத்திலேயே மரணமடைந்துவிட்டார்.
மரணமடைந்த சலேத், மகாலிங்கம் ஆகியோரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பத்திற்குக் கட்சியின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்.
படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலாஜி, பழனிவேல், அழகர்சாமி, சங்கர் ஆகியோரது மருத்துவ சிகிச்சைக்காக தலா 15,000 ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்குத் தலா 6,000 ரூபாயும் கட்சியின் சார்பில் வழங்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.