அ‌க்டோப‌ர் 2 முத‌ல் மா‌னிய ‌விலை‌யி‌ல் சமையல் பொருட்கள்: கருணாநி‌தி!

திங்கள், 15 செப்டம்பர் 2008 (09:42 IST)
''‌கா‌ந்‌தி ‌பிற‌ந்த நாளான அ‌க்டோப‌ர் 2ஆ‌ம் த‌ே‌‌தி முத‌ல் நியாய‌விலை கடைகளில் மானிய விலையில் 50 ரூபாய்க்கு ப‌த்து சமையல் பொருட்கள் வழங்கப்படும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய அவ‌ர், அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, அவர் பிறந்த நாளான செப்டம்பர் 15 முதல் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு, வழங்கும் திட்ட‌ம் ‌நிறைவேற்றிட உ‌ள்ளது.

அத்திட்டத்தின் மூலம் பயனடைய இருக்கும் பொதுமக்களுக்கு அதுமட்டுமின்றி, மேலும் உதவுகின்ற அளவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அன்றாடம் சமையலுக்கு தேவைப்படும் பல்வேறு சமையல் பொருள்களான மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், கடலை பருப்பு, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், சோம்பு, பட்டை-லவங்கம் ஆகிய 10 பொருள்களையும்,

நல்ல தரமான நிலையில், சராசரியாக குடும்பத்தின் ஒரு மாத தேவைக்குப் பயன்படும் வகையில், அவை ஒவ்வொன்றையும் ஒரு சிறிய பாலிதீன் பையில் அடைத்து பின் அந்த பைகள் அனைத்தையும் 'மானிய விலையில் மளிகைப் பொருள்' என்ற தலைப்பில் ஒரு பையிலிட்டு, 50 ரூபாய்க்கு நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்திடும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட அரசு முடிவு செய்துள்ளது.

250 கிராம் மிளகாய் தூள்-ரூ.25.50
50 கிராம் மஞ்சள் தூள்-ரூ.3
75 கிராம் மல்லித்தூள்-ரூ.12.75
75 கிராம் கடலை பருப்பு-ரூ.3.75
25 கிராம் வெந்தயம்-ரூ.3
25 கிராம் கடுகு-ரூ.2
25 கிராம் சோம்பு-ரூ.2.50
25 கிராம் மிளகு-ரூ.5.50
25 கிராம் சீரகம்-ரூ.5
10 கிராம் பட்டை-லவங்கம் 4 ரூபாய் என்கிற விலையில் மொத்தம் 67 ரூபாய்க்கு அய‌ல் சந்தையில் விற்கப்படும் இந்த சமையல் பொருள்களும் நான் முதலில் குறிப்பிட்ட அந்த பைகளின் மூலம் 50 ரூபாய்க்கு நியாய விலைக் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்படும். அதாவது 67 ரூபாய் பெறுமானமுள்ள, விலை மதிப்புள்ள பொருட்கள் 50 ரூபாய் விலைக்கு தரப்படும்.

இந்த புதிய திட்டம், உத்தமர் காந்தியடிகள் பிறந்த நன்னாளான வரும் அக்டோபர் 2ஆ‌ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்துடன் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சிறப்பு பொது வினியோகத் திட்டமும் தொடர்ந்து நடைபெற்று, நியாய விலையில் அந்த பொருட்களும் வழங்கப்படும் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌‌ர்.