சென்னையில் இருந்து திருச்சி, மதுரைக்கு சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு!
சனி, 13 செப்டம்பர் 2008 (10:39 IST)
பயணிகளின் கூட்டநெரிசலை சமாளிக்கும் விதமாக, சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு 15ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரெயில் (எண். 0629) எழும்பூரில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு திருச்சியை சென்றடையும்.
மறுமார்க்கம், திருச்சியில் இருந்து சென்னைக்கு 14ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண். 0630) திருச்சியில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதேபோல், நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு 14ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0610) நெல்லையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு 15ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0631) எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.15 மணிக்கு மதுரையை சென்றடையும்.
மேலும், திருச்சியில் இருந்து நெல்லைக்கு 14ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0633) திருச்சியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 11.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 16ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0619) சென்டிரலில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடைகிறது" என்று கூறப்பட்டுள்ளது.