தாராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

ஈரோடு: தாராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், தாராபுரத்தில் உள்ளது சார்பதிவாளர் அலுவலகம். கடந்த சில மாதங்களாக தாராபுரம் பகுதியில் திருப்பூர் தொழிலதிபர்கள் நிலம் வாங்குவதால் இப்பகுதியில் நிலத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் தாராபுரம் பத்திர பதிவு அலுவலகத்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும்.

நேற்று முகூர்த்த நாள் என்பதால் காலை பத்து மணியில் இருந்து மாலை ஆறு மணிவரை பதிவுகள் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஈரோடு லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் கண்ணம்மாள் தலைமையிலான காவலர்கள் நேற்று மாலை ஆறு மணிக்கு மேல் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இரவு 11 மணிவரை சோதனை தொடர்ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்