பொதுத்துறை, கூட்டுறவு ஊழியர்களுக்கு 30ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் போன‌‌ஸ்: அரசு அ‌றி‌வி‌ப்பு!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (10:53 IST)
பொதுத்துறை, கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு வரு‌ம் 30ஆ‌மதேதிக்குள் போனஸ் வழங்கப்படும் எ‌ன்றத‌மிழஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இததொட‌ர்பாதமிழக அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், "போனஸ் சட்டப்படி, மாநில பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஆண்டு கணக்கை முடிப்பதற்கு 8 மாதங்களுக்கு முன்பு போனஸ் வழங்கப்பட வேண்டும்.

வருமான வரி சட்ட திருத்தத்தை தொடர்ந்து, 2007-08ஆ‌ம் ஆண்டுக்கான போனஸ் தொகையை இந்த மாதம் 30ஆ‌ம் தேதிக்குள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

போதுமான உபரி நிதி இல்லாத பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றில் ரூ.10,000‌க்கு‌ள் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக 8.33 ‌விழு‌க்காடு போனஸ் கிடைக்கும்" எ‌ன்றகூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்