அ.இ.அ.‌தி.மு.க.வுட‌ன் இணை‌ந்து போரா‌ட்ட‌ம் : ராமதாஸ்!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (10:09 IST)
மக்கள் பிரச்னையில் அ.இ.அ.ி.ு.க உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராடினால் பா.ம.க.வும் துணை நிற்கும். அப்படி போராடுவதிலும் தப்பில்லை எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

webdunia photoFILE
தே‌னி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், அண்ணா பல்கலை‌க்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் குழு நடத்திய சர்வேயில் தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில், 27 மாவட்டங்கள் உயர்கல்வியில் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் தனியார் சுயநிதி கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் எத்தனை பேர்? அய‌ல் மாநிலத்தினர் எத்தனை பேர்? படிக்கின்றனர் என்ற புள்ளி விவரத்தை கல்வி அமைச்சர் தெரிவிக்க வேண்டும்.

தமிழக அரசு இலக்கு வைத்து சாராயத்தை விற்க சொல்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஒரு ரூபாய் அரிசி வேண்டாம், இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி வேண்டாம், மதுவை ஒழியுங்கள், இல்லை என்றால் ஒரு ரூபாய் அரிசி வாய்க்கரிசியாகத்தான் பயன்படும் என தமிழக தாய்மார்கள் கூறுகின்றனர்.

மின்வெட்டை கண்டித்தும், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியை பதவி விலகக்கோரியும் பா.ம.க சார்பில் வரு‌ம் 16ஆ‌ம் தேதி மாவட்ட, வட்ட தாசில்தார் அலுவலகங்கள் முன்பு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.

மக்கள் பிரச்னையில் அ.இ.அ.ி.ு.க உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராடினால் பா.ம.க.வும் துணை நிற்கும். அப்படி போராடுவதிலும் தப்பில்லை எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.