மின்வெட்டை கண்டித்து 13ஆ‌ம் தே‌தி கோவையில் ஆர்ப்பாட்டம்: ஜெயல‌லிதா!

வியாழன், 11 செப்டம்பர் 2008 (13:20 IST)
‌''மி‌ன்வெ‌ட்டை க‌ண்டி‌த்து வரு‌ம் 13ஆ‌ம் தே‌தி கோவை‌யி‌ல் அ.இ.அ.‌தி.மு.க சா‌ர்‌பி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம்'' எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல், ''தமிழக‌த்த‌ி‌ல் தற்போது நிலவும் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக கோவை மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 20 மணி நேரம் அளவிற்கு மின்வெட்டு நிலவுகிறது.

மின்சாரம் எப்பொழுது வரும், எப்பொழுது போகும் என்று கணிக்க முடியாத அளவுக்கு நிலைமை இருப்பதால், விவசாயிகள் பயன்படுத்தும் மின்மோட்டார்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுதடைகின்றன.

மேலும், மின்சார விடுமுறை காரணமாக, நெசவுத் தொழில் உற்பத்தியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நெசவாளர்கள், ஜவுளி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 மணி நேரம் அளவிற்கு மின்சார தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இதை கண்டித்து கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் வரு‌ம் 13ஆ‌ம் தேதி காலை 10 மணி‌க்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' எ‌ன்று ஜெயல‌‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.