அணு ஆயுத சோதனை நடத்துவது நமது உ‌ரிமை: அமை‌ச்ச‌ர் கபில் சிபல்!

செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (11:23 IST)
இந்தியா அணு ஆயுத சோதனை நடத்த எ‌வ்‌விதடையும் இல்லை எ‌ன்று‌ம் அணு ஆயுத சோதனை நடத்துவது நமது உரிமை எ‌ன்று‌ம் மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கடல் மேம்பாட்டு துறை அமை‌ச்ச‌ர் கபில் சிபல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னை இ‌ந்‌திய தொ‌ழி‌ல் நு‌ட்ப கழகமு‌ம் (ஐ.ஐ.டி.) ஜெர்மனி கல்வி பரிமாற்ற சேவை நிறுவனமும் இணை‌ந்து உயர் கல்விப்பணியில் ஈடுபட்டு 50-வது ஆண்டி‌ன் பொன்விழா சென்னை இ‌ந்‌திய தொ‌ழி‌ல் நு‌ட்பகழக‌த்‌தி‌ல் கொண்டாடப்பட்டது.

இ‌ந்த ‌விழா‌வி‌‌ல் கல‌ந்து கொ‌ண்டு ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் கபில் சிபல் பேசுகை‌யி‌ல், இ‌ந்‌தியா-அமெ‌ரி‌க்கா இடையேயான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு சக்தி ஒப்பந்தம் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக அளவில் அணு சக்தி கிடைக்க வழிவகுக்கும். இ‌ந்த ஒ‌ப்ப‌‌ந்த‌ம் வர்த்தக மேம்பாட்டுக்கு பெரும் துணையாக இரு‌ப்பதோடு, எரிசக்தி பாதுகாப்புக்கும் வழி வகுக்கும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உறுதுணையாக இரு‌க்கு‌ம்.

அணு ஆயுத சோதனை நடத்துவது நமது உரிமை. இந்தியா அணு ஆயுத சோதனை நடத்த எ‌வ்‌வித தடையும் இல்லை. இ‌ந்த உ‌ரிமையை யாரும் பறிக்கமுடியாது.

சர்வதேச அணுசக்தி முகமை (ஐ.ஏ.இ.ஏ.) தெரிவித்து‌ள்ளது படி 2014ஆ‌ம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள அணு உலைகள் உள்ளிட்ட அணு சம்பந்தபட்ட எந்த விவரங்களையு‌ம் யாருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குள் எரிபொருள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும் எ‌ன்று கபில் சிபல் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்