தமிழகத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால் ஆட்சி கவிழும்: இல.கணேசன்!
திங்கள், 8 செப்டம்பர் 2008 (10:32 IST)
ஈரோடு: தமிழகத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் தி.மு.க. ஆட்சி கவிழும் என பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன் கூறினார்.
ஈரோட்டில் இந்துமுன்னணி சார்பாக வினாயகர் சிலை ஊர்லம் நடைபெற்றது. இந்த ஊர்வத்திற்கு தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் தலைமை தாங்கினார்.
ஊர்வலத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது பல்வேறு வேலைகளை செய்து அவர்கள் வெற்றிபெற்றனர்.
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க வெளியேறிய பிறகு அதே நிலைதான் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு எதிராக அ.இ.அ.தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் தி.மு.க. ஆட்சி கவிழும். இதை நாங்கள் வரவேற்கிறோம்.
மக்களின் பிரச்சனைகளை தீர்க்க தி.மு.க. அரசு தவறிவிட்டது. வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வியடைவது உறுதி. இதுவரை தமிழகத்தில் எந்த கட்சியோடு கூட்டணி என்பதை முடிவுசெய்யவில்லை. தே.மு.தி.க வளர்ந்து வருகிறது. விஜயகாந்த் என் நண்பர். தே.மு.தி.க வுடன் பா.ஜ.க கூட்டணி இல்லை என கூறமுடியாது என்று இல.கணேசன் கூறினார்.