தமிழக காவல்துறைக்கு கருணாநிதி வாழ்த்து!

சனி, 6 செப்டம்பர் 2008 (17:34 IST)
150வதஆ‌ண்டி‌லஅடியெடு‌த்தவை‌க்கு‌மதமிழகக் காவல்துறை‌க்கமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி வா‌ழ்‌த்ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

TN.Gov.TNG
இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்வாழ்த்து செய்தியில், தமிழகக் காவல்துறை தனது 150-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை அறிந்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

சிறப்பு மிக்க வரலாற்றிற்கும், பாரம்பரியத்திற்கும் சொந்தமான தமிழகக் காவல் துறை, தனது சீரிய மக்கள் பணியிலும், திறமையிலும் உலக காவல்துறை வரிசையில் உயரிய இடத்தைப் பெற்று வந்துள்ளது என்றால், அது மிகையாகாது.

சட்டத்தை மதிப்போர்க்கு இன்முகம் காட்டியும், சட்டத்தை மீறுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கியும் தனக்கெனத் தனி முத்திரை பதித்துள்ளது தமிழகக் காவல்துறை.

அமைதியையும், சட்டம்- ஒழுங்கையும் பராமரிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, தமிழகம் தொழில் புரட்சியில் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில் அரசுக்கு உறுதுணையாக, பொதுமக்களின் நண்பனாக பாதுகாவலனாக, தியாக மனப்பான்மையுடன் செயல்பட்டு, பேரறிஞர் அண்ணா அறிவித்த கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க என்னுடைய உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.