கூட‌ங்குள‌த்த‌ி‌ல் உ‌ற்ப‌த்‌தி துவங்‌கியது‌ம் த‌‌மிழக‌த்து‌க்கு கூடுத‌ல் ‌மி‌ன்சார‌ம்: சோ‌னியா!

வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (10:55 IST)
கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியை தொடங்கியதும் தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என்று சோனியாகாந்தி கூறினார்.

webdunia photoWD
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் நட‌ந்பொதுக்கூட்ட‌த்‌தி‌லபங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகை‌யி‌ல், இது பெரியார் பிறந்த பூமி. இங்கு வர முடியாமல் போய்விடுமோ என்று கவலைப்பட்டேன். அதைக் கடந்து, இந்த மண்ணில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோதும், தமிழ் மக்கள் எங்கள் மீது அன்பும் பாசமும் வைத்துள்ளனர். அதற்கு நான் நன்றி செலுத்த கடமைப்பட்டு இருக்கிறேன். நேரு, இந்திரா, ராஜிவ் போன்ற தலைவர்கள் தமிழகத்தின் மீது பற்று வைத்திருந்தனர். தமிழகத்தில் காமராஜர் போன்ற தலைவர்கள் நமக்கு வழிகாட்டினர்.

மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மீட்டர் கேஜ் ரயில் பாதைகளும் 3 ஆண்டுகளில் அகலப் பாதைகளாக மாற்றப்படும்.

இந்தியா மிகப்பெரிய நாடு. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கிறோம். நமக்கு எல்லா தேவைக்கும் மின்சாரம் வேண்டும். மின்சார உற்பத்தியை நாம் அதிகரிக்க வேண்டும். விவசாயம், தொழில்முனைவோர்கள் மற்றும் வீடுகளுக்கும் அதிகமான மின்சாரம் தேவைப்படுகிறது.

மக்களின் நலன் கருதியே அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க உறுதி மேற்கொண்டு உள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்கு அணுமின்சக்தி அவசியமாகும். தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு உள்ள 2 அணுஉலைகள் செயல்படும்போது நமக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும். அதன் மூலம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும்

ஜவுளி தொழிலில் ஈரோடு நகரம் புகழ்பெற்று விளங்குகிறது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் ஈரோடு நகரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் எ‌ன்று சோ‌னியாகா‌ந்‌தி கூ‌றினா‌ர்.