தமிழகத்தில் மேலும் 2 நாள் மழை!
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்புற பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று உட்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தர்மபுரி, கிருஷ்ணகிரி, சோலகிரி, பரமத்தி வேலூர், மேட்டூர் அணை, ஏற்காடு ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பெய்துள்ளது.
பாலக்கோடு, தளி, ஊத்தங்கரை, நாமக்கல், சங்ககிரி, கோபிச்செட்டிபாளையம் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஓசூர், சேந்தமங்களம், திருச்செங்கோடு, ஆத்தூர், ஈரோடு, துறையூர், தேனி ஆகியவற்றில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.