குமரி மாவட்டத்தில் மணல் லாரிகள் வேலை ‌நிறு‌த்த‌‌ம்!

வியாழன், 4 செப்டம்பர் 2008 (11:07 IST)
குவாரிகளில் அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் விநியோகிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் ஆறு, குளங்களில் இருந்து மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து லாரிகளில் குமரி மாவட்டத்துக்கு மணல் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு மணல் ஏற்றி வரும் லாரிகள் அதிக லோடு ஏற்றி வருவதாகவும், போலி பாஸ் மூலம் மணல் கடத்துவதாகவும், கேரளாவுக்கு மணல் கடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மணலுக்கு கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க வலியுறுத்தியும் குமரி மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்