'நா‌ங்க‌ள் யாரையு‌ம் ‌மிர‌ட்ட‌வி‌ல்லை': ராய‌ல் கே‌பி‌ள் ‌விஷ‌ன்!

புதன், 3 செப்டம்பர் 2008 (17:58 IST)
'நாங்கள் யாரையும் மிரட்டவும் இல்லை, மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை' எ‌ன்று, மா‌‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில‌ச் செயல‌ர் எ‌ன்.வரதராஜ‌னி‌ற்கு மதுரை ராயல் கேபிள் விஷன் ப‌‌தில‌ளி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து அத‌ன் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி‌யிருப்பதாவது:

வரதராஜன் ஒரு தரப்பு செய்தியை மட்டும் கேட்டுக் கொண்டு அதில் உண்மை இருக்கிறதா என்பதை விசாரித்து தெரிந்து கொள்ளாமல் எங்கள் நிறுவனத்துக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தி தந்ததற்காக வருந்துகிறோம்.

மக்கள் விரும்பும் பிரபல சானல்கள் ஒளிபரப்பை ராயல் கேபிள் நிறுவனம் வழங்கவில்லை என்றும், ஏதோ நாங்கள் தான் அந்த சேனல்களின் ஒளிபரப்பை காட்ட மறுப்பது போலவும் வரதராஜ‌‌னசொல்லியிருக்கிறார்.

எங்களை பொறுத்தவரை நாங்கள் யாரையும் மிரட்டவும் இல்லை, மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை. தோழர் வரதராஜன் தெரிவித்துள்ள கருத்துகளில், எங்களுடைய நிறுவனம் எங்கள் நிறுவனத்தின் சேனல்களை‌த்தான் மதுரையில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஒளிபரப்ப வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறியிருப்பதும் உண்மையல்ல.

வரதராஜன், இங்குள்ள அரசுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பொய் வழக்கு போடுவதாக சொல்லியிருப்பது பற்றியும், மிரட்டல் என்பது பற்றியும் நன்கு விசாரித்து உண்மைகளை புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்