பேரு‌ந்து கட்டண‌ம் உயர்வு கண்டித்து புது‌ச்சே‌ரி‌யி‌ல் 1ஆ‌ம் தேதி ஆர்ப்பாட்டம்: ஜெ.

சனி, 30 ஆகஸ்ட் 2008 (12:30 IST)
புது‌ச்சே‌ரி‌யி‌ல் பேரு‌ந்து க‌ட்டண உய‌ர்வை க‌ண்டி‌த்து செ‌‌ப்ட‌ம்ப‌ர் 1ஆ‌‌ம் தே‌தி அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌‌பி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், புதுச்சேரி மாநிலத்தில் 70 அரசு பேருந்துகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி, புதுச்சேரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டாக சேர்ந்து, சட்டத்திற்கு முரணான வகையில் 18.8.2008 முதல் பேருந்துகளுக்கான கட்டணங்களை தன்னிச்சையாக உயர்த்தி இருக்கிறார்கள்.

இதனை எதிர்த்துப் பொதுமக்கள் ஆங்காங்கே பேருந்துகளை சிறைபிடித்தும், சாலை மறியல் உட்பட பல்வேறு பேராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். இதன் விளைவாக மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு மேலும் மோசமடைவதற்கான அபாயகரமான சூழ்நிலை தற்போது உள்ளது.

இப்பிரச்சினையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமல், ஆட்சி அதிகார பதவிப் போட்டியிலேயே தங்களது கவனத்தைச் செலுத்தி வருவது வெட்கக்கேடான செயல்.

தனியார் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்தும், பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், புதுச்சேரி மாநிலக் அ.இ.அ.‌தி.மு.க சார்பில் செ‌ப்ட‌ம்ப‌ர் 1ஆ‌ம் தேதி காலை 10 மணி‌க்கு புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெ‌று‌‌ம்'' எ‌ன்று ஜெயல‌‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.