கேபிள் டிவி பிரச்னை‌யி‌ல் அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: தா.பாண்டியன்!

சனி, 30 ஆகஸ்ட் 2008 (10:19 IST)
''கேபிள் டிவி பிரச்னையில் அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது'' என்று இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
செ‌ன்னை‌யி‌ல் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், மதுரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கேபிள் டி.வி பிரச்னையால் ஏராளமான கேபிள் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விரும்பிய சேனலை பார்க்க முடியாமல் மதுரை மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த பிரச்னை இரு நிறுவனங்களுக்கு இடையேயான பிரச்னை என்று பார்க்காமல், சிறுதொழில்களை நம்பி வாழும் தொழிலாளர்களின் நலன்களை பார்க்க வேண்டும்.

இதுதொடர்பாக மதுரையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். கேபிள் டிவி தொழிலாளர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். இந்த பிரச்னையில் அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது எ‌ன்று தா.பா‌ண்டிய‌ன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.