சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர் குடுமியாண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (17). இவர் சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை பள்ளி செல்வதற்காக பழைய மகாபலிபுரம் சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேருந்து பயங்கர வேகத்தில் மோதியது. இதில் மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அந்த மாணவனை அப்பகுதி மக்கள் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அந்த மாணவர் அனுமதிக்கப் பட்டுள்ளான்.
இது பற்றி தகவல் அறித மாணவர்களுக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான பேருந்தை அடித்து நொறுக்கினர்.
மேலும், அந்த நிறுவனத்திற்கு சொந்தமான மற்ற இரண்டு பேருந்துகளையும் மாணவர்கள் சேதப்படுத்தினர். இந்த விபத்துக்கு காரணமான ஓட்டுனர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்களும், பொதுமக்களும் சமாதானம் அடைந்தனர்.