ஆசனூ‌ர் மலை‌ப்பகு‌தி‌யி‌ல் பல‌த்த மழை: போ‌க்குவர‌‌த்து பா‌தி‌ப்பு!

வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (15:01 IST)
ஆசனூ‌ர் மலை‌ப்பகு‌தி‌யி‌ல் பெ‌ய்த பல‌த்த மழை‌யி‌ன் காரணமாக போ‌க்குவர‌த்து கடுமையாக பா‌தி‌‌த்தது.

ஈரோடு மா‌வ‌ட்ட‌ம் த‌மி‌ழ்நாடு- க‌ர்நாடக எ‌ல்லை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது ஆசனூ‌ர் மலை‌ப்பகு‌தி. இது கட‌ல் ம‌ட்ட‌த்த‌ி‌ற்கு மே‌ல் 1,105 ‌மீ‌ட்ட‌ர் உயர‌ம் கொ‌ண்டதாகு‌ம். இதை கு‌ட்டி கொடை‌க்கான‌ல் எ‌ன்று‌ம் அழை‌ப்பா‌ர்க‌ள்.

கட‌ந்த நா‌ன்கு நா‌ட்களாக ஆசனூ‌ர் மலை‌ப்பகு‌தி‌யி‌ல் ‌‌திடீ‌ர், ‌திடீ‌ர் என பல‌த்த மழை பெ‌ய்து வரு‌கிறது. இத‌ன் காரணமாக இ‌ப்பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள வன ஓடைக‌‌ளி‌ல் வெ‌ள்ள‌ம் பெரு‌க்கெடு‌த்து ஓடு‌கிறது.

இதனா‌ல் பல ம‌ணி நேர‌ங்க‌ள் இ‌ப்பகு‌தி‌யி‌ல் போ‌க்குவர‌த்து பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது. இ‌ந்த மழை‌யி‌ன் காரணமாக வன‌ப்பகு‌தி‌க்கு‌ள் இ‌ரு‌ந்த கா‌ட்டு யானை உ‌ள்‌ளி‌ட்ட வன ‌வில‌ங்குக‌ள் சாதாரணமாக சாலை ஓர‌ங்‌க‌ளி‌ல் காண முடி‌கிறது.

மேலு‌ம் இ‌ந்த மழையா‌ல் ‌‌தி‌‌ம்ப‌ம், ஆசனூ‌ர் பகு‌திக‌ளி‌ல் கடு‌ம் மூடுப‌னியு‌ம் ‌நிலவு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்