சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்!
புதன், 27 ஆகஸ்ட் 2008 (10:51 IST)
கூட்டநெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து கோவை, நாகர்கோவில், திருவாரூர் ஆகிய இடங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சென்ட்ரலில் இருந்து வாராந்திர சிறப்பு ரயில் (0621), ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.15 மணிக்கு கோவை சென்றடையும். மறுமார்க்கமாக சிறப்பு ரயில் (0622) ஆகஸ்ட் 30, செப்டம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு கோவையில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.15 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
எழும்பூரில் இருந்து வாராந்திர சிறப்பு ரயில் (0613) செப்டம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 6.40க்கு எழும்பூரில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.15க்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்க சிறப்பு ரயில் (0614) செப்டம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இரவு 7.40க்கு நாகர்கோவிலில் புறப்பட்டு காலை 8.50க்கு எழும்பூர் வந்தடையும்.
மற்றொரு வாராந்திர சிறப்பு ரயில் (0615) செப்டம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் இரவு 8.20க்கு எழும்பூரில் புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக சிறப்பு ரயில் (0616) செப்டம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 7.40க்கு நாகர்கோவிலில் புறப்பட்டு மறுநாள் காலை 8.50க்கு எழும்பூர் வந்தடையும்.
மற்றொரு வாராந்திர சிறப்பு ரயில் (0611) ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.15க்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக சிறப்பு ரயில் (0612) ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1.30 மணிக்கு நாகர்கோவிலில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15க்கு எழும்பூர் வந்தடையும்.
எழும்பூரில் இருந்து நாளை இரவு 8.20க்கு புறப்படும் சிறப்பு ரயில் (0691), மறுநாள் காலை 6 மணிக்கு திருவாரூர் சென்றடையும். மறுமார்க்கமாக சிறப்பு ரயில் (0692) 29ஆம் தேதி 6.15க்கு திருவாரூரில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.40க்கு எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திருவெறும்பூர், தஞ்சை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.