வ.உ.சி. கொள்ளுபேத்தி, பேரன்களுக்கு உதவி: கா‌ங். நடவடிக்கை!

ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 (15:13 IST)
வ.உ.சி. கொள்ளுபேத்தி, பேரன்களுக்கஅவர்களது வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளஎ‌ன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் விடுத்துள்ள அறிக்கை‌யி‌ல், "விடுதலை போராட்டத்தில் அன்னியருக்கு எதிராக கப்பலோட்டிய தமிழர், மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரத்தியாகி வ.உ.சி.யின் மகன் வயிற்று கொள்ளுப்பேத்தியும், பேரன்களும் வாழ வழியின்றி நடுத்தெருவில் தவிப்பதாக நாளித‌ழ் ஒ‌ன்‌றி‌ல் வெளியிட்டிருந்த துயர செய்தியை கேட்டறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

வ.உ.சி.‌யி‌ன் கொள்ளுப்பேத்தி தனலட்சுமி, கொள்ளுப் பேரன்கள் ஆறுமுகம், சங்கரன் ஆகியோருக்கு நேர்ந்துள்ள இந்த அவல நிலையை உடனடியாகப் போக்கி, அவர்களது வாழ்நாள் முழுவதும் நிம்மதியான வாழ்க்கையை அமைத்து தர தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் உரிய உடனடி நடவடிக்கை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது..

மூன்று மாவடி பேரு‌ந்து நிலையம் அருகிலுள்ள கண்ணன் கருப்பன் ஆஞ்சநேயர் கோ‌வி‌லி‌ல் தங்கியுள்ள வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தி, பேரன்களை நேரில் பார்த்து அவர்களுக்குத் தேவையான உடனடி உதவிகள் செய்து தரப்பட்டுள்ளன. அடுத்து அவர்களது வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்