ஓணம் பண்டிகையையொ‌ட்டி மங்களூர், திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்!

ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 (12:09 IST)
ஓணம் பண்டிகையையொ‌ட்டி, சென்னையில் இருந்து திருவனந்தபுரம், மங்களூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உ‌ள்ளதாதெ‌ன்னர‌யி‌ல்வஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது குறித்து தெ‌ன்னரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து மங்களூருக்கு செப்டம்பர் 9ஆ‌மதேதி சிறப்பு ரயில் (வ.எண். 0601) இயக்கப்படுகிறது. சென்டிரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு மங்களூரை சென்றடையும்.

மறுமார்க்கம், மங்களூரில் இருந்து சென்னைக்கு செப்டம்பர் 10ஆ‌ம் இந்த சிறப்பு ரயில் (0602) மங்களூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்டிரலை வந்தடையும்.

அதேபோல், சென்னையில் இருந்து மங்களூருக்கு செப்டம்பர் 10ஆ‌ம் தேதி இரவு 10.20 மணிக்கும் (0661) மறுமார்க்கம், மங்களூரில் இருந்து செப்டம்பர் 11ஆ‌மதேதி இரவு 7 மணிக்கு சென்டிரலுக்கும் சிறப்பு ரயில் (0662) இயக்கப்படுகிறது.

மேலும், சென்னை சென்டிரலில் இருந்து 11ஆ‌ம் தேதி மாலை 5 மணிக்கு மங்களூருக்கும், மறுமார்க்கம் மங்களூரில் இருந்து 12ஆ‌மதேதி மாலை 4 மணிக்கு சென்டிரலுக்கும் சிறப்பு ரயில் (0648) இயக்கப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இரு‌ந்து 10, 12ஆ‌ம் தேதிகளில் மதியம் 3.15 மணிக்கு திருவனந்தபுரத்திற்கும் (0635), திருவனந்தபுரத்தில் இருந்து 11, 13ஆ‌ம் தேதிகளில் மதியம் 12 மணிக்கு சென்டிரலுக்கும் (0636), சென்னையில் இருந்து 14ஆ‌ம் தேதி இரவு 5 மணிக்கு திருவனந்தபுரத்திற்கும் (0657), திருவனந்தபுரத்தில் இருந்து 15ஆ‌ம் தேதி மதியம் 12 மணிக்கு சென்னைக்கும் (0658) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 11ஆ‌ம் தேதி இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் (0659) எழும்பூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

மறுமார்க்கம், திருவனந்தபுரத்தில் இருந்து 12ஆ‌ம் தேதி எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0660) மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

மேலும், சென்னையில் இருந்து 13ஆ‌மதேதி திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0659) எழும்பூரில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

மறுமார்க்கம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு 14ஆ‌ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0660) திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு எழும்பூரை வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முத‌லதொடங்குகிறது" எ‌ன்றகூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்