பழனி: சாலை விபத்தில் 8 பேர் பலி!

புதன், 20 ஆகஸ்ட் 2008 (16:02 IST)
பழனி அருகே இன்று பிற்பகல் வேனும், பேருந்தும் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.

உடுமலைப்பேட்டையை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, பழனிக்கு அருகே கொலுமம்கொண்டான் - பொதும்பட்டி சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது. இதில் பேருந்து மற்றும் வேனின் முன் பகுதிகள் நொறுங்கின.

இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். சாலை விபத்தால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்