தண்டவாளம் தயா‌ரி‌ப்‌பி‌ல் ஊழ‌ல்: பா.ஜ.க. குற்றச்சாட்டு!

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:37 IST)
ர‌யி‌ல்வத‌ண்டவாள‌மதயா‌ரி‌ப்‌‌பி‌லஊழ‌லநடைபெ‌ற்று‌ள்ளதாத‌மிழா.ஜ.க. தலைவ‌ரல.கணேச‌னகு‌ற்ற‌மசா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்றவெளியிட்டுள்ள அறிக்கையில், ''சமீபகாலத்தில் தண்டவாளத்தில் விரிசல் என வந்த செய்திகள் மட்டும் சுமார் 20-ஐ தாண்டியிருக்கும். துவக்கத்தில் இது நாசகார சதி வேலை என சந்தேகம் எழுந்தது. ஆனால் அது மறுக்கப்பட்டு தண்டவாள விரிசல் தானாகவே நடை பெற்றதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

தண்டவாளம் தாங்குகின்ற சக்தியை விட அதிக எடை கொண்ட, அதிக எண்ணிக்கையில் ரயில்களும், ரயில் பெட்டிகளும் செல்வதால் தண்டவாளம் தாங்கும் சக்தி இழந்து விட்டது எ‌ன்று சொல்கிறார்கள்.

தண்டவாளம் தயாரிக்கும் நிலையிலேயே 99 ‌‌விழு‌க்காடஉறுதி இருக்க வேண்டியதற்குப் பதிலாக 73 விழு‌க்காடு மாத்திரமே உறுதி இருப்பது போல தயாரிக்கிறது என்றும் ஒரு தகவல் வருகிறது. அது உண்மையானால் அந்தத் தரக்குறைப்புக்கு பின்னணியில் ஊழல் உள்ளது. ரயிலில் சாதாரண மக்கள் அதிகம் பயணம் செய்கிறார்கள். அவர்களது உயிரை பணயம் வைத்து ரயில்வே விளையாடுகிறது'' எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்