தமிழகத்தில் இரண்டு நாள் மழை!
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (17:24 IST)
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று சில இடங்களில் குறைவான மழையே பெய்தது. வேலூர் மாவட்டம் வந்தவாசியில் அதிகபட்சமாக 4 செ.மீ மழை பெய்துள்ளது.
மதுராந்தகம், கடலூர், ஸ்ரீமுஷ்ணம், ஆரணி ஆகிய இடங்களில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர், பெரம்பலூர் மாவட்டம் வேம்லூர், மதுரை மாவட்டம் மேலூர் ஆகிய இடங்களில் 2 செ.மீ மழை பெய்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை, கடலூர் மாவட்டம் சிதம்பரம், சேத்தியாதோப்பு, தொழுதூர், விருத்தாசலம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவாரூர் மாவட்டம் கொடவாசல், வலங்கைமான், திருவாரூர், நாகப்பட்டினம் சீர்காழி, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய இடங்களில் ஒரு செ.மீ மழை பெய்துள்ளது.