பெண்களுக்கு உதவித் தொகை: முத‌ல்வ‌ர் இன்று தொடங்கி வைக்கிறார்!

வியாழன், 31 ஜூலை 2008 (09:47 IST)
திருமண‌ம் ஆகாம‌ல் 50 வயதைத் தாண்டிய ஏழைப் பெண்களுக்கு மாதம் 400 ரூபா‌ய் வழங்கும் உதவித்தொகை‌க்கான புதிய திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி இ‌ன்று தொடங்கி வைக்கிறார்.

செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் காலை 10 மணிக்கு தொட‌ங்‌‌கி வை‌க்கு‌ம் முத‌ல்வ‌ர் கருணாந‌ி‌தி, இந்த திட்டத்துக்காக பரிந்துரையை வழ‌ங்‌கிய க‌ன்‌னியாகும‌ரி மா‌வ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் ‌தலைவ‌ர் ஜோதிநிர்மலா, அ‌ந்த மாவட்டத்தில் இருந்து 5 பேரை அனுப்பவேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.

அதன்படி அ‌ந்த மாவட்டத்தில் திருமணம் ஆகாமலேயே 50 வயதைத் தாண்டிய ஏழை பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.400 வழங்கும் வகையிலான அரசு உத்தரவை வழங்கி இந்த திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி.

வெப்துனியாவைப் படிக்கவும்