385 ஊரா‌ட்‌சி ஒன்றியக்குழுத் தலைவ‌ர்களு‌க்கு வாகன‌ம்: கருணா‌நி‌தி வழ‌ங்‌கினா‌ர்!

திங்கள், 28 ஜூலை 2008 (18:00 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள ப‌ல்வேறு க‌ட்‌சிகளை‌ச் சே‌ர்‌ந்த 385 ஊரா‌ட்‌சி ஒன்றியக்குழுத் தலைவ‌ர்களு‌க்கு ‌பு‌திய வாகன‌த்தை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வழ‌ங்‌கினா‌ர்.

எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற விழாவில், தமி‌ழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை சார்பாக 385 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்களுக்கு இ‌ந்த வாகனங்களை அவ‌ர் வழங்கினார்.

இவ்விழாவிற்கு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் என பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 12 ஒன்றியக்குழுத் தலைவர்களிடம் வாகனங்களுக்கான சாவிகளை முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி வழங்கினார்.

ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் செயல்படுத்தப்படும் அதிக எண்ணிக்கையிலான, மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டப் பணிகள், தமி‌ழ்நாடு தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊராட்சி நிதி அடிப்படையிலான உள்கட்டுமானப் பணிகள் ஆகியவற்றின் நிறைவேற்றத்தை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் பார்வையிட்டு ஆ‌ய்வு செ‌ய்து கண்காணித்து திட்டப் பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் நிறைவேற்ற உதவும் நோக்கத்தோடு, ரூ.16.63 கோடி மதிப்பீட்டிலான இந்த 385 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களுக்கான 385 புதிய ஓட்டுநர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்