நடத்தையில் சந்தேகம்: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!

திங்கள், 28 ஜூலை 2008 (11:39 IST)
ஈரோட்டில் மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட கணவன் மனைவியை சரமாரி வெட்டி கொலை செய்தார்.

ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (40). இவர் எலும்பு முறிவமருத்துவராக தனியாக மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவர் 1999ம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தபோது அங்கு செவிலியராக இருந்த லீனாவுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு ஐஸ்வ‌ர்யா (9), அட்சயா (6) என்ற குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக பாலகிருஷ்ணனுக்கு தன் மனைவி லீனாவின் நடத்தையில் சந்தேகம் வந்தது. இதனால் இருவருக்கும் அடிக்கடி வாய்தகராறு ஏற்படுவது வழக்கம்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இவர்களுக்கு ஏற்பட்ட சண்டை காரணமாக லீனா ஈரோடு ரயில்வே காலணியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இவர்களின் சண்டையை சமாதானம் செய்து லீனாவின் தாய் திரேஷா பாலகிருஷ்ணன் வீட்டிற்கு கொண்டு வந்து தன் மகளை விட்டுவிட்டாள்.

தானும் மகள் வீட்டிலேயே இரவு பேத்திகளுடன் படுத்துக்கொண்டிருந்தார். அப்போது பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்து இரவு பத்து மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த லீனாவுடன் மீண்டும் சண்டை ஏற்பட்டது. உடேனே வீட்டில் இருந்த அருவாள் எடுத்து லீனாவை வெட்டி கொலை செய்தார்.

அலறல் சத்தம்கேட்டு திரேஷா மற்றும் பாலகிருஷ்ணன் குழந்தைகள் மூவரும் தடுத்துள்ளனர். ஆனால் பாலகிருஷ்ணன் ஆத்திரம் தீர லீனாவை வெட்டிகொன்று கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

தகவல் அறிந்ததும் ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் அவினாஷ்குமார், துணை கண்காணிப்பாளர் நடராஜ் உள்ளிட்டோர் பிரேதத்தை கைப்பறி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த ந‌ி‌க‌ழ்வு ஈரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்