ஈரோடு அருகே மரத்தில் வேன் மோத‌ல்: பலி 2- காயம் 10

திங்கள், 28 ஜூலை 2008 (11:36 IST)
ஈரோடு அருகே மர‌த்‌தி‌ன் ‌மீது வே‌ன் மோ‌திய விபத்தில் இருவர் இறந்தனர். பத்து பேர் படுகாயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி அ‌ண்ணாநகரை சேர்ந்த 13 பேர் ஒரு வேனில் பழனி கோவிலுக்கு சென்றனர். வேனை சுரேஷ் (23) ஓட்டிவந்தார். இவர்கள் பழனிகோவிலுக்கு செல்ல ஈரோடு அடுத்து அரச்சலூர் அருகே சென்றபோது வேன் நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த செவத்தான் (40), அமிர்தாள் (37) ஆகிய இருவரும் இறந்தனர். ஓட்டுனர் சுரேஷ் உட்பட பத்து பேர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்