அவனது பெயர் அப்துல் கபூர் என்றும், ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று சென்னை, நெல்லையில் வெடிகுண்டுகளை வைக்க சதித்திட்டம் தீட்டியவர்களில் முக்கியமானவன் என்பது தெரிய வந்தது. அவனிடம் இருந்து வெடிகுண்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தீவிரவாதி அப்துல் கபூர் கைது செய்து குறித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி, பேட்டையை சேர்ந்த அப்துல் கபூர் (39) என்பவர், வெடிகுண்டுகளை இயக்கும் டைமர் கருவிகளை திருநெல்வேலியில் தயாரித்து, சென்னைக்கு கொண்டு வர இருக்கிறார் என்ற தகவலின் அடிப்படையில் நெல்லை காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.
காவல் துறையினர் நெல்லை பேட்டையில் மக்தூம் பள்ளிவாசல் தெருவில் உள்ள அப்துல் கபூர் தங்கி இருக்கும் வீட்டை கடந்த நேற்று (27ஆம் தேதி) சோதனையிட்டபோது வெடிகுண்டுக்கான கிளாக் மெக்கானிசம், மின்சுற்றுக்கான மாதிரி வரைபடம், பேட்டரி செல்கள், இரண்டு பிளாஸ்டிக் கொள்கலன்கள் உள்பட 21 உபகரணங்களை கைப்பற்றி, அப்துல் கபூரை கைது செய்தனர். அவருடன் இதில் சம்பந்தப்பட்ட கூட்டாளிகள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.