இது தொடரபாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக நிலவும் மின்வெட்டு காரணமாக விசைத்தறி, பஞ்சாலைத் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தி, நூலின் விலை அவ்வப்போது உயர்ந்து வருவதன் காரணமாகத் துணி ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
பல்லடம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச வேஷ்டி, சேலை நெய்வதற்கான உத்தரவை தி.மு.க. அரசு குறைத்து வழங்கி வருவதன் காரணமாக, தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு அவர்களது வாழ்வாதாரமே சிதைந்துவிடும் நிலை உருவாகி உள்ளது.
இரண்டாண்டு காலமாக பில்லூர் அத்திக்கடவு இரண்டாவது குடிநீர்த் திட்டத்தை தி.மு.க. அரசு தொடங்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதோடு, முதலாவது குடிநீர்த் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீரும் குறைத்து வழங்கப்பட்டு வருவதால், கோவை மாவட்டத்தில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இவற்றை கண்டித்து பல்லடம் நகராட்சி அரங்கம் முன்பு வரும் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது.