சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இந்தியாவின் எரிசக்தி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் அணுசக்தி ஒப்பந் தத்தை தடுக்க மதவாத சக்திகளும் சில பொது உடமைகட்சிகளும் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன என்று கூறிய அவர், தோல்வி பயத்தால் பணத்தை காட்டி மக்களை ஏமாற்ற பார்த்தார்கள், ஆனால் யாரும் ஏமாறவில்லை என்று கூறினார் தங்கபாலு.
மேலும் அவர் கூறுகையில், இடதுசாரி கட்சிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக துணையாக இருந்தார்கள். அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறி சென்றார்கள். மீண்டும் அவர்கள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்று தங்கபாலு நம்பிக்கை தெரிவித்தார்.
எல்.கணேசன், செஞ்சி ராமசந்திரன் ஆகியோர் மீது குற்றச்சாற்று கூறிய ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவை வன்மையாக கண் டிக்கிறோம் என்று கூறிய தங்கபாலு, அவர்கள் இருவரும் வைகோவுக்கு முன்பே அரசியலுக்கு வந்தவர்கள் என்றார்.