சத்தியம‌ங்கல‌ம் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் தர்மலிங்கம் அய‌ல்நாடு பயணம்!

வெள்ளி, 25 ஜூலை 2008 (13:41 IST)
webdunia photoWD
த‌‌‌மிழக அரசு சா‌ர்‌பி‌ல் சத்தியமங்கலம் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் தர்மலிங்கம் மற்றும் சட்டமன்ற குழுவினர் இருபது நாள் அய‌ல்நாடு சுற்றுப்பயணம் செய்கின்றனர். அவ‌ர்களை கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை, அணிவித்தும் சால்வை அணிவித்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் சத்தியமங்கலம் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் தர்மலிங்கம், நெல்லை தொகுதி ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ராஜா உள்ளிட்டோர் அரசு சார்பில் அய‌ல்நாடு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

இன்று முதல் இருபது நாட்கள் இந்த குழுவினர் சுற்றுப்பயணம் செய்கின்றனர். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படுகின்றனர். 26ஆம் தேதி மலேசியா கோலாலம்பூர் சென்று அங்கிருந்து ஜப்பான் செல்கின்றனர்.

26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஜப்பானில் தங்குகின்றனர். 29ஆம் தேதி சீனா செல்கின்றனர். 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை சீனாவில் தங்குகின்றனர். அங்கிருந்து அடுத்த மாதம் முதல் தேதி புறப்பட்டு 2ஆம் தேதி ஹாங்காங் சென்றடைகின்றனர்.

4ஆம் தேதி முதல் 9ஆம் தேதிவரை மலேசியா கோலாலம்பூ‌ரில் தங்கி அங்கு நடக்கும் கருத்தரங்கில் கலந்துகொள்கின்றனர். 10ஆம் தேதி ஆஸ்‌ட்ரேலியா செல்கின்றனர். 12ஆம் தேதி நியூ‌ஸீலாந்தில் தங்குகின்றனர். 14ஆம் தேதி நியூ‌ஸீலாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை வந்தடைகின்றனர்.

இந்த சுற்றுப்பயணத்திற்காக சத்தியமங்கலத்தில் இருந்து ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் தர்மலிங்கம் நேற்று மாலை புற‌ப்‌ப‌ட்டா‌ர். இவரை நகரமன்ற தலைவர் வேலுசாமி, டவுன் பஞ்சாயத்து தலைவர்கள் இளங்கோ, ராஜூ, வைகைமணி, மா‌ரிச்சாமி , சத்தியம‌ங்கல‌ம் ப‌ஞ்சாய‌த்து துணை தலைவர் சுப்பிரமணி, கொத்துகாடு வேலுசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் நாகேஷ், சந்திரசேகர் உட்பட மக்கள் பிர‌திநிதிகள், பொதுமக்கள், அரசு அதிகா‌ரிகள், உறவினர் மற்றும் தி.மு.க.வினர் சால்வை அணிவித்தும் ஆள் உயர மாலை போட்டும் வாழ்த்தி அனுப்பினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்