ரவுடி கொலை : 4 பேர் கைது!
வெள்ளி, 25 ஜூலை 2008 (12:04 IST)
பெண்ணுடன் தகராறு செய்த ரவுடிவை கொன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (22) என்பவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் காவல்துறையினர் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஒரு வருட தண்டனை முடிந்த கடந்த 23 ஆம் தேதி விக்னேஷ் சிறையில் இருந்து வெளி வந்தார். உடனே அவர் பொய்யாகுளத்தில் உள்ள உறவினர் சரவணன் என்பவர் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது மனைவி லதா இருந்தார்.
அப்போது, விக்னேசுக்கும் லதாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக இது பற்றி லதா, தனது கணவர் சரவணனுக்கு தகவல் தெரிவித்தார். தந்தை சந்தானம் (65), சகோதரர்கள் பாலா (28) கந்தவேல் (22) ஆகியோருடன் சரவணன், வீட்டிற்கு சென்றார்.
அப்போது, மனைவியுடன் தகராறு செய்த விக்னேசை சரமாரியாக 4 பேரும் அடித்து உதைத்தனர். பலத்த காயம் அடைந்த விக்னேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் 4 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் பேருந்தில் வேலூருக்கு சென்று கொண்டிருந்த 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.