காங்கிரசுடன் இணைந்து செயல்பட, பா.ம.க. எப்போதும் தயாராக இருப்பதாக சோனியாகாந்தியிடம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உறுதியளித்துள்ளார்.
''மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றதற்கு பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்ததாக அக்கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பிரதமரும், காங்கிரஸ் தலைவரும் நன்றி தெரிவித்துக்கொண்டதாகவும், உங்களுக்கும், அரசுக்கும் பா.ம.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று சோனியாவிடம் ராமதாஸ் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்திக்குறிப்பில், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட பா.ம.க. எப்போதும் தயாராக இருப்பதாக ராமதாஸ் உறுதியளித்துள்ளார் என்றும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக ராமதாசுக்கு, பிரமதர் மன்மோகன்சிங் நன்றி தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.