மேலும் 500 நலிந்த கலைஞர்களுக்கு நிதி: கருணாநிதி!

திங்கள், 21 ஜூலை 2008 (15:33 IST)
நலிந்த நிலையில் வாழும் மேலும் 500 கலைஞர்களுக்கு ஓய்வூதிய நிதியாக மாதம் ரூ.1000 வீதம் வழங்கிட முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

கலைப்பணியை தங்கள் வாழ்வாகக் கொண்டு தொண்டு செய்து நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் மாதம் ரூ.500 என்பது 2006 ஆம் ஆண்டி‌ல் இரு‌ந்து மாதம் ரூ.1,000 என உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தற்போது 6,391 நலிந்த கலைஞர்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழக சட்டப் பேரவையில் கட‌ந்த மே 8ஆ‌ம் தே‌தி அ‌ன்று, '2008-2009 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 500 பேரு‌க்கு நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவி மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்படும்'' என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி, நலிந்த நிலையில் வாழும் மேலும் 500 கலைஞர்களுக்கு ஓய்வூதிய நிதியாக மாதம் ரூ.1000 வீதம் வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி இன்று உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இதன்படி மொத்தம் 6,891 நலிந்த கலைஞர்கள் பயன் பெறுவார்கள். இதன் காரணமாக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.60 லட்சம் கூடுதல் செலவாகும் எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்