ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2ஆம் தேதி கடலுக்கு சென்ற 1000-க்கும் மேற்பட்ட மீனவர்களை சிறிலங்க கடற்படையினர் கடத்தி சென்று சித்ரவதை செய்தனர். அதோடு இனியும் எங்கள் பகுதிக்கு மீன் பிடிக்க வந்தால் சுட்டு கொல்வோம் என்று எச்சரித்து அனுப்பினர்.
சிறிலங்க கடற்படையினரின் அத்துமீறலை கண்டித்தும், மீனவர்களுக்கு பாதுகாப்பு தர கோரியும் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 3ஆூம தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே மீனவர் சங்க பிரதிநிதிகள் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினர். அப்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட போவதாக மீனவர்கள் அறிவித்தனர். அதன்படி 18 நாட்களுக்கு பின் மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர். இன்று மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் சென்றன.