மின் பற்றாக்குறையைச் சமாளிக்க தமிழக அரசு அறிவித்த மின்வெட்டு இன்று முதல் தமிழகம் முழுவதும் அமல் செய்யப்படுகிறது.
இதன்படி, சென்னையில் தினமும் 1 மணி நேரமும், மாநிலத்தின் பிற பகுதிகளில் தினமும் 2 மணி நேரமும் மின்வெட்டு அமலில் இருக்கும்.
சென்னையைப் பொறுத்த வரை 8 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மின் வெட்டு அமல் செய்யப்படும். காலை 10 மணி முதல் மின் வெட்டு அமல் செய்யப்படும். ஒவ்வொரு பகுதியிலும் 1 மணி நேரம் என மொத்தம் 8 மணி நேரத்துக்கு சென்னை நகரில் மின் வெட்டு அமலில் இருக்கும்.
விவசாயிகளுக்கு வாரத்தின் முதல் 5 நாள்களுக்கு பகலில் 6 மணி நேரமும், இரவில் 8 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும். மீதியுள்ள 2 நாட்களில் பகலில் 4 மணி நேரமும் இரவில் 8 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும்.
கிராமங்களில் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு பகல் நேரத்தில் நான்கு மணி நேரம் மின் தடை செய்யப்படும்.
இரவு நேரத்தில் மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதால், மாலை 6 மணி முதல் இரவு 10 வரை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் மின் தடை இருக்காது.