மத்திய அரசுக்கு ஆதரவாக வா‌க்க‌ளி‌ப்பே‌ன்: தயாநிதி மாறன்

ஞாயிறு, 20 ஜூலை 2008 (14:05 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் நட‌க்கு‌ம் ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்‌பி‌ல் ம‌த்‌திய அரசு‌க்கு ஆதரவாக‌த்தா‌ன் வா‌க்க‌ளி‌ப்பே‌ன் எ‌ன்று முன்னாள் மத்திய அமை‌ச்சரு‌ம், தி.மு.க. நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினருமான தயாநிதி மாறன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவரது இ‌ல்ல‌த்‌தி‌ல் செ‌ய்‌தியாள‌ர்களை‌‌ச் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சினா‌ர்.

அ‌ப்போது, வரு‌ம் 22ஆ‌ம் தே‌தி நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக் கெடுப்பில் எனது நிலை குறித்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பல தரப்பட்ட தகவல்கள் வரு கின்றன. இது தொடர்பாக அகில இந்திய அளவில் பல கட்சிகளின் மூத்த தலைவர்கள் போனில் அழைத்தும், நேரடியாக சந்தித்தும் பேசினார்கள்.

அவர்களிடம் நான் எனது நிலையை விளக்கினேன். குடியரசு‌த்‌ தலைவ‌ர் ம‌ற்று‌ம் குடியரசு‌த் துணை‌த் தலைவ‌ர் தேர்தலில் தி.மு.க. ஆதரித்த வேட்பாளருக்கு தான் வாக்களித்தேன்.

நான் முரசொலி மாறன் மகன். எந்த அரசியல் கட்சியின் வேட்பாளராக வெற்றி பெற்றேனோ, தற்போது அந்த கட்சியும், அதன் தலைமையும் எடுக் கும் முடிவுக்கு கட்டுப்பட்டு எனது ஜனநாயக கடமையை ஆற்றுவேன். மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவாக வா‌க்க‌ளி‌ப்பே‌னஎ‌ன்று கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்