கரூர் : சாலை விபத்தில் 18 பேர் காயம்

ஞாயிறு, 20 ஜூலை 2008 (13:32 IST)
சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓம்னி வண்டி மீது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து மோதியதில் பேருந்தில் இருந்த 18 பேர் காயமடைந்தனர்.

கரூர் - கோயம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கன்நெல்லி என்ற கிராமத்தில் இந்த விபத்து நேரிட்டது.

கரூரில் இருந்து திருப்பூர் வந்து கொண்டிருந்த அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து, தனியார் பேருந்துடன் மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்