திருப்பத்தூரில் 10 செ.மீ. மழை!
சனி, 19 ஜூலை 2008 (17:12 IST)
தமிழகத்தில் நேற்று பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அதிகபட்சமாக 10 செ.மீ மழை பெய்துள்ளது. இன்று காலை 8.30 மணி வரை நிலவரப்படி, திருச்சி மாவட்டம் மாணப்பாறையில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் தலா 9 செ.மீ மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை, தர்மபுரி, வேலூர், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சேலம் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், ஈரோடு தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் புனலூர், செய்யூர், வந்தவாசி, தஞ்சாவூர் மாவட்டம் வலங்கைமான், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆலங்குடி, இழுப்பூர், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சேந்தமங்கலம், நீலகிரி மாவட்டம் குன்னூர், கூடலூர், திருச்சி, மதுரை மாவட்டம் திருமங்கலம் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் சிராலி, திருக்கோவிலூர், புதுக்கோட்டை, ஆலங்குளம், வேலூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை, சோழகிரி, ராயப்கோட்டை, ஈரோடு மாவட்டம் ஏற்காடு, காங்கேயம், மதுரை மாவட்டம் மேலூர், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, தாமரைபாக்கம் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செயலியில் பார்க்க x