மூ‌ன்றாவது அ‌ணி அமை‌க்க‌ப்படுமா? ராமதாஸ் ப‌தி‌ல்!

வெள்ளி, 18 ஜூலை 2008 (10:44 IST)
மூன்றாவது அணி அமைக்கப்படுமா? எனக் கேட்கிறீர்கள். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்போது தான் எந்தக் கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது தெரியவருமஎன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூ‌றினா‌‌ர்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.‌வி.தங்கபாலு, சென்னையில் ராமதா‌ஸ் நே‌ற்று சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களுக்கு ராமதாஸ் அளித்த பேட்டி‌யி‌ல், ''நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பீர்களா? என்ற கேள்வியே தவறானது. எங்கள் ஆதரவு காங்கிரசுக்கு உண்டு என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம்.

காடுவெட்டி குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தொடர்பாகவும், தமிழக மீனவர் பிரச்னை குறித்தும் உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரிடம் முறையிட்டோம்.

மூன்றாவது அணி அமைக்கப்படுமா? எனக் கேட்கிறீர்கள். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்போது தான் எந்தக் கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது தெரியவரும்.

காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உண்டு. அது, அந்தக் கட்சியின் கருத்து என்ற அவர் குரு கைது தொடர்பான பிரச்னையை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றார்.

1980-களில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஆள்தூக்கிச் சட்டம் என்றும், பழிவாங்கும் நடவடிக்கைக்காக பயன்படுத் தப்படும் என்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்தார் கருணாநிதி. ஆனால், இன்று அந்தச் சட்டத்தின் கீழ் காடுவெட்டி குருவை கைது செய்திருக்கிறார்கள். அவரது கைது காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் எ‌ன்று ராமதா‌‌ஸ் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்