அரசின் மதுக்கொள்கை விதிமுறைகளை மீறவில்லை: உயர் நீதிமன்றம்!
வியாழன், 17 ஜூலை 2008 (13:52 IST)
தமிழக அரசின் மதுக்கொள்கை சட்டப்பூர்வமான, அரசமைப்புச் சட்ட ரீதியான விதிமுறைகள் எதையும் மீறவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு கூறியுள்ளத ு. அரசின் மதுக்கொள்கைகளில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று கூற ி, பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் சங்கதலைவி நிர்மலா ராஜா தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டத ு. மேலும் தமிழக அரசின் மதுக்கொள்கை குறித்த விவரங்களை பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத் தொடர்பாளர் அரசிடம் இரண்டு வாரத்துக்குள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கி உள்ளத ு. இது போன்று அரசின் மதுக்கொள்கை குறித்த விளக்கம் கேட்பவர்களுக்க ு, விண்ணப்பித்த ஆறு வாரங்களுக்குள் அரசின் மதுவிலக்கு மற்றும் கலால்வரி செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளத ு. நிர்மலா ராஜா தாக்கல் செய்திருந்த மனுவில ், தமிழக அரசின் தலைமை செயலாளர ், மதுவிலக்கு மற்றும் கலால்வரி செயலாளர ், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆகியோர் தமிழகத்தில ், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அயல்நாட்டு மதுவின் விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கின்றனர ். குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மறுவாழ்வு மையங்களை அமைத்து மது குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும ். குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பது போல் தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார ். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தத ு. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 50 மறுவாழ்வு மையங்களை தமிழக அரசு ஏற்கனவே அமைத்துள்ளது எதிர்காலத்தில் மேலும் பல மையங்களை பல்வேறு இடங்களில் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது என்ற தமிழக அரசு வழக்கறிஞரின் அறிக்கையை தலைமை நீதிபதி ஏ.க ே. கங்குல ி, நீதிபதி எப்.எம ். இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான அமர்வு புதிவு செய்து கொண்டத ு. பின்னர ், அரசின் மதுக்கொள்கைகளில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று கூற ி, ப ா. ம.க. மகளிர் சங்கத் தலைவி நிர்மலா ராஜா தாக்கல் செய்த மனுவை இந்த அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டத ு.
செயலியில் பார்க்க x