சென்னை அடுத்த பூந்தமல்லி குமணன் சாவடியை சேர்ந்தவர் பாட்சா (50). அசோக்நகரில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் காவலாளியாக இருந்து வந்த இவர் இன்று காலை அங்கு தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
காவலாளி பாட்சா கல்லால் தாக்கி மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
கடந்த சில நாட்களாக வடபழனி, மேற்கு மாம்பலம், அசோக்நகர் பகுதிகளில் காவலாளிகள், பிச்சைக்காரர்களை மர்ம கொலையாளி கொலை செய்து வருகிறான்.
இந்த நிகழ்வுகளை தொடர்ந்து வடபழனி, பகுதியில் சுற்றித்திரிந்த மன நோயாளிகள், பிச்சைக்காரர்கள், பேப்பர் பொறுக்குபவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அவர்களில் சந்தேகத்துக்கிடமான 40 பேரை தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அசோக்நகரில் ரியல் எஸ்டேட் காவலாளி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.