க‌ச்ச‌த்‌தீவு ஒ‌ப்ப‌ந்த‌த்தை ர‌த்து செ‌ய்ய வே‌ண்டு‌ம்: இல.கணேசன்!

வியாழன், 17 ஜூலை 2008 (16:37 IST)
''கச்சத் தீவை ‌சி‌றில‌ங்காவு‌க்கஅளித்ததால், ராமே‌ஸ்வரம் பகுதி மீனவர்களின் மீன்பிடி பரப்பு குறைந்துவிட்டது. எனவே, உச்ச நீதிமன்றத்தை அணுகி 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்''' என்று த‌‌மிழக ா.ஜ.க தலைவர் இல.கணேசன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌‌ட்டி‌யி‌ல், ''ராமர் பாலத்தை இடிக்க மட்டுமே உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இப் பகுதி நீங்கலாக ஏற்கெனவே, திட்டமிட்டபடி இதர பகுதிகளில் சேது கால்வாய் தோண்டும் பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

விரைவில் சட்ட நிபுணர்களுடன் உச்ச நீதிமன்றத்தை அணுகி, இதர பகுதிகளிலும் சேது கால்வாயைத் தோண்டும் பணிகளை நிறுத்த தடையாணை பெறப்படும்.

ராமே‌ஸ்வரம் பகுதி மீனவர்கள் ‌சி‌றில‌ங்கா கட‌ற்படையினரால் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஒரே சமயத்தில் 1,000 மீனவர்கள் கடத்தப்படுகின்றனர். இதன்பின் ‌சி‌றில‌ங்கா அரசு மறுப்பு தெரிவிக்கிறது. ஆனால், நமது நாட்டுக்கும், மீனவர்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டிய இந்திய கடற்படை என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை. இதுகுறித்து கடற்படை விளக்‌க‌ம் அ‌ளி‌க்க வேண்டும்.

கச்சத் தீவை ‌சி‌றில‌ங்காவு‌க்கு அளித்ததால், ராமே‌ஸ்வரம் பகுதி மீனவர்களின் மீன்பிடி பரப்பு குறைந்துவிட்டது. எனவே, உச்ச நீதிமன்றத்தை அணுகி 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்'' எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்