ஆ‌ற்று‌க்கு அரு‌கி‌ல் க‌ழிவுகளை‌க் கொ‌ட்டிய ஐ.டி.‌சி. ‌நிறுவன‌ம் ‌மீது நடவடி‌க்கை!

புதன், 16 ஜூலை 2008 (15:21 IST)
கோவை‌யி‌லஆ‌ற்று‌க்கஅரு‌கிலு‌ம் ‌விளை ‌நில‌ங்க‌ளிலு‌மம‌க்கு‌மத‌ன்மைய‌ற்ற ‌பிளா‌ஸ்டி‌கஉ‌ள்‌ளி‌ட்க‌ழிவுகளை‌ககொ‌ட்டிய ஐ.ி.‌ி., ம‌ற்று‌மஎ‌ஸ்.எ‌‌‌ஸ்.ஆ‌ர். ச‌ந்‌திரசேகரஆ‌கிய ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் ‌மீதத‌மி‌ழ்நாடமாசு‌கக‌ட்டு‌ப்பா‌ட்டவா‌ரிய‌மநடவடி‌க்கஎடு‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்ததமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டு‌ள்செய்திகு‌றி‌ப்பு:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் இயங்கி வரும் ஐ.டி.சி. லிமிடெட் தொழிற்சாலை, கா‌கித‌ககழிவுக‌ளி‌லஇருந்து கா‌கிஅட்டைகளை தயாரித்து வருகிறது. அதற்கான மூலப் பொருட்களான பழைய காகித தாள்கள்(புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், செய்தித் தாள்கள் மற்றவகை காகிதங்கள்) இறக்குமதி செய்யப்படுகின்றது. இதனுடன் கலந்துள்ள மெல்லிய பிளாஸ்டிக், ரப்பர் ஷீட், உலோகங்களினாலான குண்டூசி, பட்டை ஆகியவற்றை காகித அட்டை தயாரிப்பதற்கு முன் தனியாக பிரித்தெடுக்க எஸ்.எஸ்.ஆர். சந்திரசேகரா அண்டு கம்பெனி என்ற நிறுவனத்தை ஏஜெண்டாக நியமித்துள்ளது.

இந்நிறுவனம் மேலே கூறிய பொருட்களை பிரித்தெடுத்து காகிதத்தை மட்டும் ஐ.டி.சி. ஆலைக்கு அனுப்பி வைக்கின்றது. உற்பத்தியின் போது ஏற்படும் கழிவு மற்றும் ஏஜெண்டிடம் உள்ள கழிவுகளை வாரிய ஒப்புதலின்றி வெளியே கொட்டியுள்ளனர்.

இது வாரிய இசைவாணைக்கு முரண்பாடான செயலாகும். இதுகுறித்து தல ஆய்வு செய்து வாரியம் இவ்விரு தொழிற்சாலைகளுக்கும் விளக்கம் கேட்டு சட்டப்படி கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் குற்றவியல் சட்டப்படி இந்த நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தினர் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு தொழிற்சாலைகளின் மீது வாரியம் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

முக்கிய ஆறுகளின் 5 கிலோ மீட்டருக்குள் அரசின் அனுமதியின்றி அமைத்த ஐ.டி.சி.யின் தன்நிலை மின் உற்பத்தி நிலையம் செயல்பட தொடங்கியதால் உற்பத்தியை நிறுத்தி வைக்க வாரியம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌‌‌ம்யூ‌னி‌ஸ்‌டகு‌‌ற்ற‌ச்சா‌ற்று!

மு‌ன்னதாமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையி‌், "ஐ.டி.சி. நிறுவனம் வேஸ்ட் பேப்பர் இறக்குமதி செய்கிறோம் என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இருந்து முனிசிபல் குப்பைகளை இறக்குமதி செய்து வந்துள்ளது. இதனை 2005-ம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கையும், களவுமாக கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கடுத்தும் ஐ.டி.சி. நிறுவனம் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் இருந்து கண்டெய்னர்கள் மூலம் கழிவுகளை இறக்குமதி செய்து வருகிறது. இந்தக் கழிவுகளை தேக்கம்பட்டி ஐ.டி.சி. கம்பெனி அருகேயுள்ள கிராமங்களில் உள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் விளைநிலங்களில் கொட்டிப் புதைத்துள்ளது.

ஐ.டி.சி. பெயரில் வந்திறங்கும் கழிவுகளை பிரிக்கும் ஒயிட் ஸ்டார், எஸ்.எஸ்.ஆர். கம்பெனிகளும், ஐ.டி.சி. பேப்பர் யூனிட்டும், குடிசைத் தொழில் என்ற அனுமதியுட‌ன் 4 ஆண்டுகளாக செயல்படுகின்றன. சுமார் 500 கோடி முதலீட்டில் இயங்கும் நிறுவனம் குடிசைத் தொழில் என்ற பெயரில் இயங்கி வருவதே முறைகேடானது" எ‌ன்றகூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

"தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலையில் நீர் மற்றும் காற்றை மாசுபடுத்தும் விதமான எந்த தொழிற்சாலையும், தொடங்கப்படகூடாது; ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலையானால், அதனை விரிவுபடுத்தக்கூடாது என்று அரசாணை இருக்கிறது.

ஆனால், ஐ.டி.சி. நிறுவனம் பவானி ஆற்றில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்குள்ளும், ஒயிட் ஸ்டார் நிறுவனம் பவானி ஆற்றில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்குள்ளும் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனங்களின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டு‌‌ம்" எ‌ன்று‌ம் தனது அறிக்கையில், என்.வரதராஜன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்